Tuesday, 17 February 2015

BYWIFI வீடியோ டவுன்லோட்


வீடியோ டவுன்லோட் மற்றும் வீடியோ ஸ்டீரிமிங்(video streaming) வேகத்தை அதிகப்படுத்த இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. Youtube, Dailymotion, Metacafe, MySpace, Yahoo, Justin.tv போன்ற பல வெப்சைட்களில் உள்ள வீடியோவை தரவிரக்கம் செய்ய உதவுகின்றது. நீங்கள் வீடியோ பார்க்கும் போதே இந்த சாப்ட்வேரில் டவுன்லோட் துவங்கிவிடுகின்றது. அதுபோக வீடியோ டவுன்லோட் வேகத்தையும் அதிகரிக்கின்றது.
நீங்கள் இதை இன்ஸ்டால்(install) செய்ததும் டாஸ்க்பாரில் உட்கார்ந்துவிடும். நீங்கள் வீடியோ பார்க்கும் போது இதில் டவுன்லோட் தொடங்கிவிடும். 100% டவுன்லோட்(download) முடிந்ததும் நீக்கள் உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்துக் கொள்ளலாம்.

மேலும் டவுன்லோட் செய்த வீடியோவின் பார்மேட்டை(format) இதன் Bywifi Media Transcoder உதவியுடன் விரும்பிய பார்மேட்டில்( AVI, MP4, MP3, ASV..) மாற்றிக்கொள்ளலாம்.

FLV பார்மேட்டில் டவுன்லோட் செய்த பைல்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரு FLV பைலாக மாற்றும் வசதியும் இதன் Bywifi FLV Merger ல் உண்டு.

Bywifi Media Transcoder, Bywifi FLV Merger, Bywifi Dowloader ஆகிய அனைத்தும் இன்ஸ்டால் செய்யும் போது இணைக்கப்படுகின்றது. ஒரே கல்லில் மூன்று மாங்காய்.

இது முற்றிலும் இலவசமாக(freeware) கிடைக்கின்றது.

டவுன்லோட் லிங்க்
http://www.bywifi.com/

No comments:

Post a Comment